வைரலாகும் ஆடை டீஸரின் வடிவேலு வெர்ஷன் !
By Aravind Selvam | Galatta | June 24, 2019 12:10 PM IST
மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆடை.இந்த படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ளார்.ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படம் இதுதான்.இந்த படத்தை V ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் Firstlook சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் நிறைவடைந்தது இந்த படத்திற்கு A certificate கிடைத்துள்ளது.
இந்த படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தின் வடிவேலு Version ஒன்றை ரசிகர் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த படத்தின் இயக்குனர் ரத்னகுமார் இதனை பகிர்ந்துள்ளார்.மிகவும் காமெடியாக அமைந்துள்ள இந்த டீஸர் என்னை கவர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Nowadays there is Vadivelu version for every content. #Aadai is not a exception. This is hilarious 😜😆and i couldn't resist myself from sharing. Since the movie gonna talk abt freedom . I respect this "Freedom of speech". Sorry @Amala_ams 😏 pic.twitter.com/h2cT3hSBbU
— Rathna kumar (@MrRathna) June 20, 2019