இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர்கள் உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘கண்ணே கலைமானே ’. ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் படத்தை உதயநிதி ஸ்டாலினே தயாரித்துள்ளார். 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் பிப்ரவரி 2019-ல் வெளியாகவிருக்கிறது, உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணத்தில் முக்கிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், இதை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிடுகிறார்.