இன்றைய காலகட்டத்தில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக அதை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.நடிப்பதோடு நிறுத்தி விடாமல் தயாரிப்பாளர்,பாடலாசிரியர்,வசனகர்த்தா என்று பல பரிமாணங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்.

Two Leading Young Heroes Join Hands For Upcoming Flick Screenplay Penned by VijaySethupathi

விக்ராந்த் நடிப்பில் தாக்க தாக்க பட இயக்குனர் சஞ்சீவ் இயக்கத்தில் உருவாக இருந்த படத்திற்கு இவர் திரைக்கதை அமைப்பதாக இருந்தது ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது என்ற தகவல்கள் கிடைத்தன.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் மீண்டும் இதே கூட்டணி இணைந்து படம் ஒன்றில் பணியாற்றுகிறது.

Two Leading Young Heroes Join Hands For Upcoming Flick Screenplay Penned by VijaySethupathi

தற்போது ஒரு கதையில் உருவாக உள்ள இந்த படத்தை சஞ்சீவ் இயக்க இம்முறை இரண்டு கதாநாயகர்கள் நடிக்கிறார்கள்.பாக்ஸிங் விளையாட்டை மையமாக கொண்டுள்ள இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் ஹீரோவாக நடிக்க உள்ளனர்.விஜய்சேதுபதி இந்த படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் வேலைகளை இயக்குனருடன் இணைந்து செய்வார் என்று தெரிகிறது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Two Leading Young Heroes Join Hands For Upcoming Flick Screenplay Penned by VijaySethupathi