சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி தீபாவளியன்று வெளியான படம் சர்க்கார். 

Thalapthy Vijay Movie Sarkar Joins The 100Crore Club

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகிபாபு, ராதா ரவி ஆகியோர் தளபதி விஜயுடன் இணைந்து நடித்து அசத்தியிருந்தனர்.   

சர்க்கார் திரைப்படத்தில் சர்ச்சை கூறிய காட்சிகளை நீக்கியதன் மூலம் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு சாதனை படைத்து வருகிறது.   

தற்போது வெளியான செய்தி என்னவென்றால், சர்க்கார் 150 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து சர்க்கார் திரைப்படம் மூலம் மூன்றாவது 150 கோடி கலக்ஷன் செய்த பெருமையும் தளபதி விஜயை சேரும்.   

கேரளா மற்றும் அமெரிக்க திரையரங்குகளில் நேற்று சற்று சரிவு ஏற்பட்டாலும், மீண்டும் பிக்-அப் ஆகி வெற்றிநடை போட்டு வருகிறது என்பது கூடுதல் தகவல்.