தமிழ் செய்திகள்

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விருந்தளித்த தளபதி விஜய் !

By | Galatta |

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விருந்தளித்த தளபதி விஜய் !

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விருந்தளித்த தளபதி விஜய் !
May 26, 2019 15:41 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.படங்களில் நடிப்பதை தாண்டி சமூகஅக்கரை கொண்ட ஒரு நடிகர் விஜய்.கஷ்டப்படும் பலருக்கும் தனது விஜய் மக்கள் மன்றத்தின் மூலம் பல உதவிகளை செய்து வருகிறார்.

ஒவ்வொரு வருடமும் மே 1 உழைப்பாளர் தினத்தன்று ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விருந்தும் பரிசு பொருட்களும் வழங்குவது வழக்கம்.அதுபோல் இந்த வருடமும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பரிசுகள் வழங்க திட்டமிட்டிருந்தார் ஆனால் தேர்தல் போன்ற சில காரணங்களால் இந்த நிகழ்ச்சி தள்ளிப்போனது.

இதனையடுத்து இன்று உழைப்பாளர் தினத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தையும் பரிசு பொருட்களையும் விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினார்.இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.விஜய் தற்போது தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் Firstlook விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More