சமூக வலைத்தளங்களில் தற்சமயம் முதன்மையாக இருப்பது ட்விட்டர் தான். இந்நிலையில் இந்த வருடத்திற்கான அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்களில் நடிகர் விஜய்க்கு 8-வது இடம் கிடைத்துள்ளது. 

பெரும்பாலான அரசியல் துறை சார்ந்தவர்கள் இருக்கும் இப்பட்டியலில் நடிகர்கள் பவன்கல்யாண், ஷாருக்கான், விஜய் மற்றும் மகேஷ்பாபு மட்டுமே உள்ளனர்.

இப்பெயர் பட்டியலில், தமிழ் திரையுலகை சார்ந்த ஒரு நடிகர் இருப்பது தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.