தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களில் ஒருவர் தளபதி விஜய்.தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.இதையடுத்து இவர் எந்த படத்தில் நடிக்க போகிறார் என்று கோலிவுட் வட்டாரமே ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Thalapathy 64 Cast and Crew Details Official Clarification From Sources Close to Vijay

இந்நிலையில் இயக்குனர் மோகன் ராஜா ஒரு கல்லூரி விழாவில் விரைவில் விஜயுடன் இணைந்து ஒரு படம் பண்ணுவேன் என்று தெரிவித்தார்.இதையடுத்து தளபதி 64 படத்தை இயக்கப்போவது இவர் தான் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்தது.

Thalapathy 64 Cast and Crew Details Official Clarification From Sources Close to Vijay

இந்த படத்தில் சமந்தா அல்லது நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகினகலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிக்கிறார் என்றும் தகவல்கள் வெளிவந்தன.இதையடுத்து விஜய் ரசிகர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

Thalapathy 64 Cast and Crew Details Official Clarification From Sources Close to Vijay

Thalapathy 64 Cast and Crew Details Official Clarification From Sources Close to Vijay

இந்த தகவல்கள் உண்மையா என்பதை அறிய தளபதி விஜயின் நெருங்கிய வட்டாரங்களை தொடர்பு கொண்டோம்.அப்போது அவர்கள் இந்த தகவல் வெறும் வதந்தி தான் என்று தெரிவித்தனர்.தளபதி 63 படத்தின் நிறைவை ஒட்டியே அடுத்த படத்திற்கான வேளைகளில் தளபதி விஜய் இறங்குவார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Thalapathy 64 Cast and Crew Details Official Clarification From Sources Close to Vijay

இதனால் தளபதி 63 முடியும் தருணத்தில் தான் நாம் தளபதி 64 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.அதுவரை தளபதி 63 குறித்த அப்டேட்கள் வரும் என்று தெரிவித்துள்ளனர்.

Thalapathy 64 Cast and Crew Details Official Clarification From Sources Close to Vijay