தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. 

Thalapathy 63 Title Yet To Be Confirmed By The Team Official Clarification

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்தனர் படக்குழுவினர்.

Thalapathy 63 Title Yet To Be Confirmed By The Team Official Clarification

நயன்தாரா,மேயாத மான் புகழ் நடிகை இந்துஜா, ரெபா மோனிகா, கதிர், யோகிபாபு, விவேக் இப்படத்தில் நடிக்கிறார். படத்தில் தளபதி விஜய் C.மைக்கேல் என்ற பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும், ஏரியாவில் உள்ள மக்கள் அவரை செல்லமாக CM என்று அழைப்பர் என்ற செய்தியை முன்பே கலாட்டா தெரிவித்திருந்தது.

Thalapathy 63 Title Yet To Be Confirmed By The Team Official Clarification

தற்போது படத்தின் டைட்டிலே CM-ஆக இருக்கக்கூடும் என்ற செய்தி பெரிதளவில் பேசப்பட்டது. இதுகுறித்து தளபதி விஜய் தரப்பினரிடம் கேட்டபோது CM டைட்டில் இல்லை என்பதை தெளிவு படுத்தினர்.

Thalapathy 63 Title Yet To Be Confirmed By The Team Official Clarification