தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 63.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அட்லீ இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Thalapathy 63 Story Controversy Assistant Director KP Selvah Opens UP in an Exclusive Interview

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதனிடையே இந்த கதை தன் கதையுடன் ஒத்துப்போகிறது என்று உதவி இயக்குனர் KP செல்வா வழக்கு பதிவு செய்திருந்தார்.இதனை அடுத்து அவரை பேட்டி எடுத்த பொழுது நமக்கு பிரத்யேகமாக ஒரு சில தகவல்களை தெரிவித்துள்ளார் அதனை பார்க்கலாம்

Thalapathy 63 Story Controversy Assistant Director KP Selvah Opens UP in an Exclusive Interview

இன்னும் Firstlook கூட வெளிவராத நிலையில் தளபதி 63 படத்தின் கதை உங்கள் கதையுடன் ஒத்துப்போகிறது என்று எப்படி சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இது முதலில் விஜயின் பிரச்சனை அல்ல அட்லீ , முருகதாஸ் போன்ற இயக்குனர்களின் பிரச்சனை.நான் இந்த கதையை 2017லிலேயே முடித்துவிட்டேன் இரண்டு கதையையும் ஒத்துபோகிறதா இல்லையா என்பதை நீதிமன்ற தீர்ப்பு வரும்போது தெரிந்துகொள்வீர்கள் என்றும் தெரிவித்தார், மேலும் அவர் அளித்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்