சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

வரும் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் முதல் காட்சி சென்னையில் 1 மணிக்கு துவங்கப்படும் என்று நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியாகியது.