சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் 15.21 என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியாகியது. ஃபேமிலி ஆடியன்ஸை வெகுவும் கவர்ந்த இப்படம் மென்மேலும் வசூல் சாதனை புரிய கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை பதிவு செய்கிறோம்.