விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தல அஜித் தற்போது இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை.

இந்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்.ரங்கராஜ் பாண்டே,டெல்லி கணேஷ்,ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து படத்திற்கு யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.