பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்த பிரபல நடிகை !
By Sakthi Priyan | Galatta | May 25, 2019 18:42 PM IST
ரசிகர்கள் மட்டும் அல்ல பல பிரபலங்களும் மிக பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 3. விரைவில் ஆரம்பமாக உள்ளதை உறுதி செய்யும் விதத்தில் ஏற்கனவே இது குறித்த ப்ரோமோ ஒன்று சமீபத்தில் வெளியாகியது.
தற்போது நடிகை விசித்திரா ட்விட்டரில், உலகிற்கே தெரியும்படி ப்ரஷ் செய்வது, பெட்டில் இருந்து குதித்து குத்து பாட்டிற்கு ஆடுவது, சில்லியான டாஸ்க்குகள் செய்வது, உணர்வுகளை கட்டுப்படுத்துவது என்று பிக்பாஸ் நிகழ்ச்சியாக கிண்டல் செய்துள்ளார்.
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பது உறுதியாகவில்லை.