நகைச்சுவை விரும்பிகளை மிகவும் ஈர்த்த லொள்ளு சபா புகழ் இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் நகைச்சுவை மன்னன் சந்தானம் அவர்களின் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் தில்லுக்கு துட்டு. 

தற்போது வெளியாகிய தில்லுக்கு துட்டு 2 ட்ரைலர் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் ராஜேந்திரன், ஊர்வசி மற்றும் சில நடிகர்கள் நடித்துள்ளனர்.

நிச்சயமாக முதல் பாகம் போலவே இதுவும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக என்ன டா பேய் லாம் பேட்ட டயலாக் பேசுது என ஊர்வசி பேசும் வசனம் அமோக வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.