EXCLUSIVE : சூப்பர் ஸ்டாரின் பேட்ட படம் செய்த சாதனை !
By Sakthi Priyan | Galatta | January 11, 2019 14:07 PM IST
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக நேற்று வெளியான படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை தந்த கார்த்திக் சுப்பராஜ் மற்றும் பேட்ட படக்குழுவினரை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தற்போது இப்படதின் முதல் நாள் வசூல் 12.9 கோடி என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியாகியது. அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இப்படம் மேலும் வசூல் சாதனை புரிய கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.