தற்போதைய நிலையில் அனைத்து படங்களிலும் நடித்துவரும் ஒரு நடிகர் என்றால் அது யோகிபாபு தான்.இவர் இல்லாத படங்கள் மிகவும் குறைவு தான்.தனக்கென ஒரு ஸ்டைலையும்,தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கும் இவர் கடைசியாக சர்கார்,விஸ்வாசம் என்று இரண்டு பெரிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தளபதி 63,தர்பார்,இந்தியன் 2 என பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார்.அதோடு ஹீரோவாகவும் தர்மபிரபு,கூர்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.கூர்கா படத்தினை டார்லிங் படத்தின் இயக்குனர் சாம் ஆன்டன் இயக்குகிறார்.4 Monkeys Studio நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

ராஜ் ஆர்யன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஒரு ஷாப்பிங் மாலின் கூர்காவாக இருக்கும் யோகிபாபுவை சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை.தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.செம காமெடியான இந்த டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த டீஸரை கீழே உள்ள லிங்கில் காணலாம்