இறுதிசுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் படம் சூர்யா 38. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார். 

Sudha Kongaras Soorarai Pottru Movie Clarification Regards Presence Of Famous Actress

படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், சூர்யா 38 படத்தின் இறுதிகட்ட ஆடியோ பணியில் இருப்பதாக சமீபத்தில் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Sudha Kongaras Soorarai Pottru Movie Clarification Regards Presence Of Famous Actress

ஓ.பி. ஜிந்தால் விமான நிலையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், படக்குழுவினர் சென்னை திரும்பியதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. முதல் லுக் போஸ்டரிலே விமானம் கொண்டுள்ளதால், படத்தின் முக்கிய காட்சிகளை இங்கு படமாக்கியிருக்கலாம் என்ற கருதப்படுகிறது.

Sudha Kongaras Soorarai Pottru Movie Clarification Regards Presence Of Famous Actress

தற்போது படத்தில் நடிகை பூஜா ஹெக்டே உள்ளார் என்ற வதந்தி பெரிதளவில் பரவியது. இதுகுறித்து மேலும் விசாரிக்கையில் நடிகை பூஜா ஹெக்டே படத்தில் எந்த பாத்திரத்திலும் நடிக்கவில்லை என்பது உறுதியானது.