மாநாடு படத்திற்காக மாஸாக ரெடி ஆகும் STR ! வைரலாகும் புகைப்படம்
By Aravind Selvam | Galatta | May 26, 2019 18:17 PM IST
தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்ட நடிகர்களில் ஒருவர் STR.நடிப்பு,நடனம்,இயக்கம்,இசை என அனைத்து துறைகளிலும் அசத்தும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
இதனை தொடர்ந்து Studio Green நிறுவனம் தயாரிப்பில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படங்களை தவிர ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார்.
மாநாடு படத்திற்காக தனது உடலெடையை குறைக்கும் பணியில் STR ஈடுபட்டுள்ளார்.இதனையடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படமொன்று இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.புதிய ஹேர்ஸ்டைலோடு உள்ள STR புகைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.