தமிழ் செய்திகள்

திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த STR !

By | Galatta |

திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த STR !

திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த STR !
May 26, 2019 13:22 PM IST

தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்ட நடிகர்களில் ஒருவர் STR.நடிப்பு,நடனம்,இயக்கம்,இசை என அனைத்து துறைகளிலும் அசத்தும் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இதனை தொடர்ந்து Studio Green நிறுவனம் தயாரிப்பில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.மேலும் இவருக்கு ஆகஸ்ட் மாதம் தனது நெருங்கிய சொந்தத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன. இதையடுத்து STR ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் திருமணம் குறித்த வரும் செய்திகள் வெறும் வதந்திகள் தான் இன்னும் எதையும் முடிவு செய்யவில்லை.சரியான நேரத்தில் நானே அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.எனது அடுத்த படம் குறித்த அறிவிப்புகளை குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை ஆண்டுகளாக தனது திரைவாழ்க்கையில் உறுதுணையாக இருந்த பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் எனது ரசிகர்கள் அனைவர்க்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More