தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் சதீஷ். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரம் ஏற்று நடிப்பவர். நடிகர் சிவகார்த்திகேயனுடன் முகப்புத்தகம் எனும் குறும்படம் துவங்கி இன்று வரை அவருடன் திரைப்பயணம் செய்கிறார்.

மெரினா, எதிர் நீச்சல், மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன் போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

தற்போது இவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் குறித்து, என்ன App சார் ? என்று கேலியாக கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு நகைச்சுவையாக தான் நடித்த படத்தின் புகைப்படத்தை ரீட்வீட் செய்திருக்கிறார் சதீஷ்.

சிவகார்த்திகேயனின் சினிமா துறை சார்ந்த நண்பர்களில் இவரும் முக்கிய நபர் என்று அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் SK 13 படத்திலும் சதீஷ் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Sivakarthikeyans Epic Troll Question To Comedian Sathish In Twitter