இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜுடன் இணைந்து ஒரு படம் நடிக்கிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Sivakarthikeyan SK 16 Movie Directed By Pandiraj Release Plans Revealed

அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Sivakarthikeyan SK 16 Movie Directed By Pandiraj Release Plans Revealed

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தை செப்டம்பர் 27 ஆயுத பூஜையன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்துளளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sivakarthikeyan SK 16 Movie Directed By Pandiraj Release Plans Revealed