சேலம் அருகே மாணவியை மிரட்டிக் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் எம்.ஜி.ஆர். நரிக்குறவர் காலணியைச் சேர்ந்த சுரேகா, திருச்செங்கோடு பகுதியில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் செவிலியர் பயிற்சி முடித்துவிட்டு, அதே கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

Salem college lecturer gangrape 5 people in TN

சுரேகா வேலை பார்க்கும் அதே கல்லூரியில் செந்தமிழ் பாண்டியன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது, அம்மம்பாளையம் நரிக்குறவர் காலணியைச் சேர்ந்த வரதராஜன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர், சுரேகவை பின்தொடர்ந்து சென்று, உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்துள்ளனர்.

இதனை, அந்த இளம் பெண்ணிடம் காட்டியும், மிரட்டியும் 5 பேரும் தொடர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. அத்துடன், இவர்கள் இளம் பெண்ணுடன் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதையும் வீடியோ எடுத்து, அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

Salem college lecturer gangrape 5 people in TN

மேலும், அந்த வீடியோ பதிவை, சுரேகாவின் அண்ணன் செல்போனுக்கும் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆத்தூர் போலீசார், இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரையும் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

வடமாநிலங்களில் நடக்கும் பாலியல் பலாத்காரம் போலவே, தமிழ்நாட்டிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளதால், சேலம் மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.