தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை பட்டியலில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தனி இடமுண்டு. தடையறத் தாக்க படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியவர், தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, NGK போன்ற படங்களில் நடித்து அசத்தினார். தற்போது சிவகார்திகேயனின் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். 

asass

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என தென்னிந்தியா மொழிகளில் கலக்கி வருகிறார். ஹிந்தியில் நடிகர் அஜய் தேவ்கனுடன் இவர் நடித்த படம் தி தி பியார் தி. இந்த படத்தில் இடம்பெற்ற பார்ட்டி சாங் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை ரகுல் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

xzxz

சமீபத்தில் வெளியான மன்மதடு 2 படத்திலும் இவர் நடித்த சர்ச்சைக்குரிய காட்சி பெரிதளவில் பேசப்பட்டது. வளர்ந்து வரும் நடிகைகள் இப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் தெரிவிக்கின்றனர்.