ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு முன்வந்த ஐஸ்வர்யா ராய் ! முழுவிவரம் இதோ !
By Sakthi Priyan | Galatta | December 06, 2018 09:59 AM IST
விர்ஜின் பசங்களின் நாயகன் என இளைஞர்கள் மத்தியில் போற்றப்படும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிக்கும் சர்வம் தாளமயம் என்ற திரைப்படம் திரைக்கு வெளிவரும் முன்னரே 31-வது டோக்கியோ திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
மைண்ட் ஸ்க்ரீன் சினிமாஸ் தயாரிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மேலும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய கடைசி வரிகள் இப்படத்தில் தான். பீட்டர் என்ற கதாப்பாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷும் மற்றும் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளனர்.
சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தி கொண்ட ராஜிவ்மேனன் இப்படத்தில் லைவ்-சின்க் சவுண்ட் ரெகார்டிங் என்ற தொழில்நுட்ப காரணியை வைத்து இயக்கிருக்கிறார்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாடல் இன்று வெளியாகிறது. இப்பாடலை நடிகை ஐஸ்வர்யா ராய் வெளியிடுகிறார். ஏற்கனவே வெளியான முதல் பாடல் மிகவும் ஈர்த்து வரும் நிலையில், இரண்டாம் பாடலுக்காக காத்திருக்கின்றனர் இசை பிரியர்கள்.
And the wait is over..😊
— Rajiv Menon (@DirRajivMenon) December 5, 2018
It's our charming and talented "Aishwarya Rai" who will release our Second Single from #SarvamThaalaMayam tomorrow by 6PM..
Can't wait to hear it 😍#SarvamThaalaMayamTamil#SarvamThaalaMayamSecondSingle pic.twitter.com/wSyzq1c8By