சூர்யா படத்திற்காக இணையும் சூப்பர்ஸ்டார் ரஜினி-ஷங்கர் !
By Aravind Selvam | Galatta | July 17, 2019 16:14 PM IST
இந்த ஆண்டு வெளிவர உள்ள முக்கிய பங்களில் ஒன்று சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் காப்பான்.சயீஷா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ,ஆர்யா ,சமுத்திரக்கனி ,பொம்மன் இரானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.அயன் ,மாற்றான் வெற்றியை தொடர்ந்து சூர்யா கே.வி.ஆனந்த் இணையும் மூன்றாவது படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படம் ஆகஸ்ட் 30 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,இயக்குனர் ஷங்கர்,கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டோர் முக்கிய விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
#KaappaanAudioLaunch on 21st July2019 6pm onwards🔥. Guests of Honour 😎SuperStar @rajinikanth 🎬AceDirector @shankarshanmugh ✍️ @vairamuthu 🎼 @Jharrisjayaraj @Suriya_offl @Mohanlal @arya_offl @bomanirani @sayyeshaa @SonyMusicSouth pic.twitter.com/bMQr2QfWTU
— Lyca Productions (@LycaProductions) July 17, 2019