இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் புரட்சி தளபதி விஷால் நடிப்பில் உருவாகும் படம் அயோக்யா. இப்படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். 

விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். அயோக்கியா படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்ததென்றும், இப்படப்பிடிப்பு 20-25 நாட்கள் நடைபெறும் எனவும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும் இப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என தெரியவந்துள்ளது.