2018-ம் ஆண்டு தமிழ் சினிமா துறை தனக்கென ஒரு பாதையை வழிவகுத்த ஆண்டு என்றே கூறலாம். அதிக படங்கள் அசராமல் வெளியாகி ரசிகர்களுக்கு திரை விருந்தளித்தது. இதன் மூலம் பல புதிய இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்களை கண்டெடுத்தது தமிழ் சினிமா. 

அறிமுகமான முதல் படத்திலேயே தங்களது திறனை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ள மேடை தான் இந்த கலாட்டா விருதுகள். கலை தாகம் உள்ள அறிமுக கலைஞர்களுக்கு இவ்விருதினை அளித்து அங்கீகரித்து அழுகு பார்த்தது கலாட்டா. 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இளைஞர்களின் இன்ஸ்பிரஷனாக திகழும் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன் கனா படத்திற்காக சிறந்த பாடகி என்ற விருதினை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் பெற்றுகொண்டார். மேடை ஏறிய ஆராதனா ரசிகர்களுக்காக வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி அனைவரையும் ஈர்த்தார்.

இப்பாடலை பாட வைத்த ஆராதனாவின் பெற்றோர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி சிவகார்த்திகேயன், கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மற்றும் இசையமைப்பாளர் திபு நிநன் தாமஸுக்கே சேரும். மேலும் இந்த மழலை பாடகி பல்வேறு சிகரம் தொட கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.