தற்போதய நிலையில் அனைத்து படங்களிலும் இடம்பெற்றிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது யோகிபாபு தான்.இவர் இல்லாத படங்கள் மிகவும் குறைவு தான்.தனக்கென ஒரு ஸ்டைலையும்,தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கும் இவர் கடைசியாக சர்கார்,விஸ்வாசம் என்று இரண்டு பெரிய படங்களில் நடித்துள்ளார்.தற்போது தளபதி 63-ல் நடித்து வருகிறார்.

Popular Comedian Yogi babu Signs a New Film Under Studio Green Banner Teddy Starring Arya

இதை தொடர்ந்து இந்தியன் 2,தலைவர் 166 ஆகிய படங்களிலும் நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.தற்போது இவர் ஆர்யா நடிப்பில் உருவாக இருக்கும் டெடி படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

Popular Comedian Yogi babu Signs a New Film Under Studio Green Banner Teddy Starring Arya

இந்த படத்தின் Firstlook போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Comedian Yogi babu Signs a New Film Under Studio Green Banner Teddy Starring Arya