தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Popular Comedian Reunites With Thalapathy Vijay After Nine Years in Thalapathy 63

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Popular Comedian Reunites With Thalapathy Vijay After Nine Years in Thalapathy 63

தற்போது இந்த படத்தில் பிரபல காமெடியானான பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவர் விஜயுடன் இணைந்து நிலவே வா,துள்ளாத மனமும் துள்ளும்,ஷாஜஹான்,தமிழன்,சச்சின்,சுறா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கடைசியாக சுறா படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த இவர் 9 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணையவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Popular Comedian Reunites With Thalapathy Vijay After Nine Years in Thalapathy 63

நாளுக்கு நாள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறிக்கொண்டே போகிறது.தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இந்த படம் பக்க commercial படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்

Popular Comedian Reunites With Thalapathy Vijay After Nine Years in Thalapathy 63