தமிழ் செய்திகள்

விஜய்சேதுபதி படத்தில் அறிமுகமாகும் முன்னணி நடிகரின் தங்கை !

By | Galatta |

விஜய்சேதுபதி படத்தில் அறிமுகமாகும் முன்னணி நடிகரின் தங்கை !

விஜய்சேதுபதி படத்தில் அறிமுகமாகும் முன்னணி நடிகரின் தங்கை !
June 12, 2019 13:05 PM IST

தமிழ் சினிமாவின் செம பிஸியான நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.மாமனிதன்,சிந்துபாத்,சங்கத்தமிழன்,லாபம்,கடைசி விவசாயி என கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தை அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்குகிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு க/பெ.ரணசிங்கம் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயினாக பவானி ஸ்ரீ நடிக்கிறார்.இவர் நடிகரும்,இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் பவானி அறிமுகமாகிறார்.இந்த படம் இவருக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைய கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More