சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. 

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.

மரணமாஸ் பாடலை தொடர்ந்து படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி வருகிறது. தற்போது பேட்ட படத்தில் நவாஷுதின் சித்திக் பாத்திரம் குறித்த போஸ்ட்டர் வெளியானது. படத்தில் இவரது ரோல் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.