தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. 

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்தனர் படக்குழுவினர். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக அறிவித்தனர். நயன்தாராவை தொடர்ந்து, மேயாத மான் புகழ் நடிகை இந்துஜா இப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியது. இவர்களுடன் சின்ன கலைவாணர் விவேக் நடிக்கிறார்.

தற்போது இப்படத்தில் பரியேறும் பெருமாள் புகழ் நடிகர் கதிர் இணைந்துள்ளார். தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கதிர், தளபதியுடன் எப்படிபட்ட ரோலில் நடிக்கப்போகிறார் என்ற ஆவலுடன் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.