தென்னிந்திய திரை வட்டாரத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை சமந்தா. தமிழில் சூப்பர் டீலக்ஸ், தெலுங்கில் மஜிலி என அடுத்தடுத்த படங்களை தந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். பெண் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கியுள்ள ஓ பேபி படத்தில் நடித்திருக்கிறார். 

Oh Baby Trailer Released Featuring Samantha Akkineni With Naga Shaurya

இந்த படத்தில் சமந்தாவுடன் முன்னணி நடிகை லக்ஷ்மி, ராஜேந்திர பிரசாத், ரமேஷ், ஊர்வசி, பிரகதி, தேஜா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மிக்கி இசையமைக்கிறார்.

Oh Baby Trailer Released Featuring Samantha Akkineni With Naga Shaurya

2014-ல் வெளிவந்த கொரிய மொழி காமெடித் திரைப்படம் மிஸ் கிராணி எனும் படத்தின் தழுவலாக இப்படம் உருவாகியிருக்கலாம் எனத் தகவல்கள் கசிந்து வருகிறது. 70 வயது மூதாட்டி திடீரென 20 வயது குமரியாக மாறியதால் என்னென்ன நடக்கிறது என்பது தான் கதைக்கரு.

Oh Baby Trailer Released Featuring Samantha Akkineni With Naga Shaurya

தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரிதளவில் ஈர்த்து வருகிறது. வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாகவுள்ளதால் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள்.