இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரின் அசத்தலான நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்த படம் பாபா. நிஜ வாழ்க்கையில் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கையுடையவர் ரஜினிகாந்த். மஹா அவதார் பாபாஜி மீது அதிக அன்பு கொண்டதால், இந்த பாபா திரைப்படம் நெருக்கமான ஒன்று என்றே கூறலாம். 

Official Clarification On Rajinikanth KS Ravikumar Baba Sequel Official Clarification On Rajinikanth KS Ravikumar Baba Sequel

தற்போது பாபா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது, அந்த படத்தை இயக்குனர் KS ரவிக்குமார் இயக்கவுள்ளார் என்ற செய்தியும் இணையத்தில் காட்டுத்தீ போல் வேகமாக பரவியது. இதுகுறித்து ரஜினி தரப்பினர் மற்றும் இயக்குனர் KS ரவிக்குமாரையும் தொடர்பு கொண்ட போது, அப்படி ஏதும் இல்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

Official Clarification On Rajinikanth KS Ravikumar Baba Sequel

தமிழ் சினிமாவில் கமெர்ஷியல் கிங் என போற்றப்படும் இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிக்குமார். குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை இயக்கும் வல்லமை படைத்தவர். இயக்கம் அல்லாது நடிப்பிலும் அசத்துபவர். தற்போது இவர் இயக்கும் தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Official Clarification On Rajinikanth KS Ravikumar Baba Sequel

மேலும் ரசிகர்கள் இதுபோன்ற செய்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.