விக்ரம் வேதா ரீமேக்கில் இந்த நடிகர்களா ? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
By Sakthi Priyan | Galatta | March 23, 2019 12:08 PM IST
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டின் பிளாக்பஸ்டரான திரைப்படம் விக்ரம் வேதா. Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே மகத்தான வரவேற்பை பெற்றது. நடிகர் மாதவன் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக இந்த படம் அமைந்தது.
Relaince Entertainment நிறுவனத்துடன் இணைந்து Y Not ஸ்டுடியோஸ் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளது. நடிகர்கள் குறித்த விவரம் இன்னும் வெளியாக வில்லை.
இந்நிலையில் தெலுங்கில் பாலகிருஷ்ணா மற்றும் ராஜசேகர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கபோகிறார்கள் என்று பெரிதளவில் வதந்தி கிளம்பியுள்ளது.
இதுகுறித்து Y NOT ஸ்டுடியோஸிடம் கேட்டபோது, இணையத்தில் வரும் செய்திகள் அனைத்தும் தவறான செய்தியே. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெளிவாக கூறினர். மேலும் எங்கள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வதந்திகளுக்கு செவி சாய்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.