ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமாகி தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கொள்ளை அடித்தவர் நிவேதா பெத்துராஜ்.இவர் அடுத்தடுத்து தமிழில் நடிக்க இவருக்கு ரசிகர்களும் கூடத்தொடங்கினர்.இதையடுத்து சில பெரிய படங்களிலும் நடித்தார்.ஜெயம் ரவியுடன் இவர் நடித்த டிக் டிக் டிக் திரைப்படம் ஹிட் அடித்தது.

தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இதனை அவரே தனது ரசிகர்களுடனான இன்ஸ்டாகிராம் உரையாடலில் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேருகிறார் நிவேதா பெத்துராஜ்.

இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக ராஷி கண்ணா ஏற்கனவே அறிவிக்கபட்டுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.விஜயா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.