தமிழ் மக்களின் மனதில் ஓர் அங்கமாக, நிரந்தர பந்தமாக இருக்கும் ஓர் நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். காலம் காலமாக குறைவான விலையில் தரமான உபயோக பொட்டுகளை வழங்கி மக்களின் மகிழ்ச்சியில் பங்குபெறுகின்றனர். வாடிக்கையாளர்களின் நாடி அறிந்த வல்லுனர்கள். ஜவுளி கடையில் துவங்கி இன்று வீட்டு உபயோக பொருட்கள், பாத்திரங்கள், அணிகலன்கள், மளிகை சாமான்கள், மின்னணு உபகரணங்கள், காய்கறிகள் என பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கின்றனர்.

New Advertisement Of Legend New Saravana Stores Featuring Legend In Lead

இதற்கு முக்கிய கரணம் தொழிலதிபர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன். உழைப்பை கடுகளவு போல் வைத்து கொள்ளாமல், கடலளவு பரப்பி அதில் முழுமூச்சுடன் செயல்பட்டு வரும் இவரது செயல் திறன் போற்றக்கூடியவை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கோலிவுட் நட்சத்திரங்களுடன் இணைந்து விளம்பர படத்தில் நட்சத்திரமாய் ஜொலித்தார். சினிமா நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து தொழிலதிபர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அவர்களுக்கும் ரசிகர்கள் வரத்துவங்கினர். வீட்டில் ஒருவராய் கொண்டாட துவங்கினர்.

New Advertisement Of Legend New Saravana Stores Featuring Legend In Lead

கடந்த 2017-ம் ஆண்டு தொழிலதிபர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் வெள்ளித்திரையில் நடிக்கப்போகிறார் என்ற செய்தி பெரிதும் வளம் வந்தது. பின்பு இவை வதந்தி என பேசினார்கள். தற்போது வதந்தி வரலாறாய் மாறிய நற்செய்தி கிடைத்துள்ளது. ஆம் நாம் விரும்பிய நல்ல மனிதர் நடிகராக கால் பதிக்கவிருக்கிறார். தொழிலதிபர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் ஓர் படத்தில் நாயகனாக நடிக்கப்போகிறார். விரைவில் படம் மற்றும் படக்குழுவினர் பற்றிய தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.