தமிழ் செய்திகள்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ஸ்பெஷல் பாடல் வெளியீடு !

By | Galatta |

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ஸ்பெஷல் பாடல் வெளியீடு !

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் ஸ்பெஷல் பாடல் வெளியீடு !
June 12, 2019 20:25 PM IST

கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பில் , சின்னத்திரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்து வருகிறார்.Black Sheep குழுவில் உள்ள கார்த்திக் வேணுகோபால் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் RJ விக்னேஷ்காந்த்,ராதாரவி,நாஞ்சில் சம்பத் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.ஷபீர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து இந்த படத்திற்கு சென்சார் போர்டு யூ சர்டிபிகேட் வழங்கியுள்ளது.

இளைஞர்களை கவரும் படி யூடியூபை மையப்படுத்தியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது இந்த படத்தின் சிறப்பு பாடலான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More