கூர்க்கா மை வெள்ளக்காரி பாடல் வெளியானது !
By Sakthi Priyan | Galatta | June 19, 2019 19:00 PM IST
யோகிபாபு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்டைலையும்,தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருக்கும் இவர் கடைசியாக சர்கார்,விஸ்வாசம் என்று இரண்டு பெரிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தர்மபிரபு, SK 16, தளபதி 63, இந்தியன் 2, தர்பார் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆன்டன் இந்த கூர்க்கா படத்தை இயக்குகிறார். 4 Monkeys Studio நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ராஜ் ஆர்யன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது படத்தின் மை வெள்ளக்காரி பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. இந்த பாடலை ஜிவி பிரகாஷ்குமார் பாடியுள்ளார். விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.