திரையுலகில் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, இயக்குனராக அதை தாண்டி சிறந்த மனிதராக விளங்குபவர் இவர். 

திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான படம் காஞ்சனா. முதலில் முனி என வெளிவந்த இப்படம். காஞ்சனா என்ற பெயரில் தொடர்ந்து 2 பாகங்களை வெளியிட்டது. ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. முனி 4 ஆன காஞ்சனா மூன்றாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாம், 2019 ஏப்ரலில் திரையிட திட்டமிட்டுள்ளனர் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகியது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் ஓவியா மற்றும் டாப்ஸீ நடித்திருக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

மோஷன் போஸ்டருக்கென தனி வரவேற்பு உள்ள நிலையில், நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் காஞ்சனா 3 படத்தின் மோஷன் போஸ்டருக்கு மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் லாரன்ஸ் ரசிகர்கள்.