இயக்குனர் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் ராஜு முருகன் கதை மற்றும் வசனத்தில் உருவாகியிருக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ். மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா, RJ விக்னேஷ் காந்த், வேல ராமமூர்த்தி போன்ற நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்திற்கு செல்வக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Mehandhi Circus Full Movie Review By Galatta Featuring Madhampatty Rangaraj And Shwetha In Lead

டைட்டில் கார்டிலேயே ஓவியம் மூலம் கதையை துவங்கியது பார்ப்பவர்களுக்கு கண்கவரும் விதத்தில் இருந்தது. கதையின் முதல் பகுதி பூம்பாறை கொடைக்கானலில் ஆரம்பிக்கிறது.

Mehandhi Circus Full Movie Review By Galatta Featuring Madhampatty Rangaraj And Shwetha In Lead

உண்மையான காதலை மனதளவில் யாராலும் பிரிக்க முடியாது இதுதான் மெஹந்தி சர்க்கஸின் கதைச்சுருக்கம். கேசட் கடை வைத்திருக்கும் இளைஞனுக்கும், சர்க்கஸில் வேலை பார்க்கும் பெண்ணுக்கும் இருக்கும் காதலை மைய்யப்படுத்தியே கதை நகர்கிறது. பறக்கும் பாவை, அபூர்வ சகோதரர்கள், ஏழாம் அறிவு இந்த படங்களுக்கு பிறகு சர்க்கஸ் சுற்றுசூழலை பிரதிபலிக்கும் படம் இதுவே.

Mehandhi Circus Full Movie Review By Galatta Featuring Madhampatty Rangaraj And Shwetha In Lead

90களில் கதையின் முதல் பகுதி வருவதால் அதற்கு ஏற்ற சுற்றுப்புறத்தை அமைத்திருக்கின்றனர் படக்குழு. அங்கங்கே வரும் இளையராஜா போஸ்டர் மற்றும் AR ரஹ்மான் பற்றிய குறிப்பு அற்புதம்.

Mehandhi Circus Full Movie Review By Galatta Featuring Madhampatty Rangaraj And Shwetha In Lead

படத்தில் வரும் ஏரியல் ஷாட்கள் மற்றும் ராஜுமுருகனின் வசனம் படத்திற்கு தூண் என்றே கூறலாம். முண்டாசுப்பட்டி ப.பாண்டி படத்திற்கு பிறகு ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பக்கபலமாக விளங்குகிறது. படத்தில் வரும் டைமிங் காமெடி அங்கங்கே சிறப்பாக இருந்தது. ஹீரோயினுக்கு வைத்த ஸ்லோ மோஷன் காட்சிகள் அதிகபட்சமாக தெரிந்தது.

Mehandhi Circus Full Movie Review By Galatta Featuring Madhampatty Rangaraj And Shwetha In Lead

சர்க்கஸ் பற்றிய படம் என்னும் போது இன்னும் பெரிய அளவில் சர்க்கஸ் பற்றி காண்பித்திருக்கலாம். கரணம் தப்பினால் மரணம் என்று வாழ்ந்து வரும் கலைஞர்களின் வாழ்வியலை காண்பித்தது கூடுதல் சிறப்பு. முதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் இல்லை என்று தான் கூற வேண்டும்.

Mehandhi Circus Full Movie Review By Galatta Featuring Madhampatty Rangaraj And Shwetha In Lead

கிளைமாக்ஸ் காட்சியில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருந்தால் நிச்சயம் காவியமாக இருந்திருக்கும், அதை படக்குழுவினர் தவறவிட்டனர் என்று தான் கூற வேண்டும். மொத்தத்தில் காலம் கடந்த உண்மை காதலை உணர்த்தும் படம் இந்த மெஹந்தி சர்க்கஸ்.

கலாட்டா ரேட்டிங் - 2.75/5