விர்ஜின் பசங்களின் நாயகன் என இளைஞர்கள் மத்தியில் போற்றப்படும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் ஜெயில். இப்படத்தை இயக்குனர் வசந்தபாலன் இயக்குகிறார். 

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், நடிகை அதிதிராவ் ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் காத்தோடு என்ற டூயட் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை படத்தின் நாயகியான அதிதிராவ் சிறந்த பாடகியும் கூட.

இவர் தமிழில் பாடும் முதல் பாட்டு இதுதான் என்பது கூடுதல் தகவல். தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்த அதிதி, பாடகியாகவும் மனதில் இடம்பெறுவார் என்றே கூறலாம்.