புரியாத புதிர் பட புகழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என்ற படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் நடிக்கின்றனர். 

மாதவ் மீடியா தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், இப்படத்தில் சித்தர் எனும் பாடலை பாடியுள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. இதற்க்கு முன் வைபவ் நடித்த படத்திற்கு விஜய்சேதுபதி பாடியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

பியார் பிரேமா காதல் படத்திற்கு பிறகு,நடிகர் ஹரிஷ் கல்யாணிற்கு இப்படம் சிறந்தவொன்றாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.