இயக்குனர் பாலாஜி மோஹன் இயக்கத்தில் குறும்புத்தனமான டான் பாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கும் மாரி 2 படத்தில் ரோபோ ஷங்கர், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர். 

நடிகர் தனுஷ் தயாரித்து நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே வெளிவந்த ரவுடி பேபி பாடல் சக்கை போடு போட்டு வருகிறது.

தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது. வட சென்னை வெற்றிக்கு பிறகு தனுஷின் இந்த படம் அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.