சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி வெளியான படம் விஸ்வாசம்.

இமான் இசையில் உருவாகியிருந்த இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா, விவேக், கோவை சரளா ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் பாடலாசிரியர் விவேகா ட்விட்டரில், படத்தில் அஜித் சாரின் உச்சரிப்பு ஓர் ஆச்சரியம். அவர்தானா என ஐயம்கொள்கிற அளவுக்கு தேனி வட்டாரவழக்கில் பின்னிஎடுத்திருக்கிறார். கோபம்,குழைவு,பாசம், பரிதவிப்பு என புதுப்புது பரிமாணம் கட்டுகிறார். அஜித்சார் பயணத்தில் இது ஒரு மைல்கல் என்று பதிவிட்டிருக்கிறார்.