பிகில் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம் !
By Aravind Selvam | Galatta | June 24, 2019 18:40 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இந்த படத்தின் வெளிநாட்டு திரையரங்க மற்றும் விநியோக உரிமையை டோரா,வேலையில்லா பட்டதாரி,மாரி,கீ உள்ளிட்ட படங்களை விநியோகம் செய்த UIE movies நிறுவனம் மற்றும் XGen studio நிறுவனம் இணைந்து வாங்கியுள்ளனர்.