பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ரஜாத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் கார்த்தி 17 என கூறப்படும் தேவ். 

இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகர்கள் தேவ் படத்தில் முக்கிய பாத்திரத்தில் உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் டீஸர் வெளியாகி சமூக ஊடங்கங்களில் பெரிதும் பேசப்பட்டது.

தற்போது இதுகுறித்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இப்படத்தின் முதல் பாடல் வரும் 14-ம் தேதி வெளிவரும் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.