ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கனா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமான இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது.

Kanaa Remake Muddhabandhi Video Song Released Featuring Aishwarya Rajesh

இந்நிலையில் கனா படத்தை தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். பீமனேனி சீனிவாசராவ் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

Kanaa Remake Muddhabandhi Video Song Released Featuring Aishwarya Rajesh

தற்போது இந்த படத்தின் முத்தாபந்தி பாடல் வெளியாகியது. தமிழில் ஒத்தையடி பாடலில் தர்ஷன் ஆடியிருப்பார். கிருஷ்ணா காந்த் எழுதிய இந்த பாடலை யாசின் நாசிர் பாடியுள்ளார்.