ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தூங்காவனம் புகழ் ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். 

Kadaaram Kondan Release Update And Current Shooting Update Revealed By Director Rajesh Selva

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்தது. பாடல் குறித்த அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு சுவையான செய்தியை சமீபத்தில் பதிவு செய்தார் ஜிப்ரான். கடாரம் கொண்டான் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன்ஸ் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது என்ற செய்தி இறுதியாய் வெளியாகியது.

Kadaaram Kondan Release Update And Current Shooting Update Revealed By Director Rajesh Selva

தற்போது சியான் விக்ரம் பாடிய பாடலின் ப்ரோமோ காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியை நம்முடன் தொலைபேசி வாயிலாக பகிர்ந்தார் இயக்குனர் ராஜேஷ் M செல்வா. மேலும் இப்படம் ஏப்ரல் 19 வெளியாகும் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Kadaaram Kondan Release Update And Current Shooting Update Revealed By Director Rajesh Selva