லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சயீஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, பூர்ணா, போமன் இரானி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட டீஸர் அனைவரையும் ஈர்த்தது. 

Kaappaan Second Song Kurilae Sets To Release

படத்தின் வில்லன் சிராக் ஜானி G எனும் குஜராத்தி படத்தில் நாயகனாக நடிக்கும்போது அடிபட்டதாகவும் பின்பு அதிலிருந்து மீண்டு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது. தெலுங்கில் பந்தோபஸ்த் எனும் டைட்டில் கிடைத்தது நாம் அறிந்தவையே. முதல் பாடலான சிரிக்கி பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

Kaappaan Second Song Kurilae Sets To Release

வரும் ஜூலை 21-ம் தேதி காப்பான் படத்தின் இசை வெளியிட்ட விழா நடைபெற உள்ளதாம். திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமசந்திர ஹாலில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர் மற்றும் வைரமுத்து கலந்துகொள்ளவிருக்கின்றனர். தற்போது படத்தின் இரண்டாம் பாடல் குறிலே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.